புயலை கிளப்பியஜார்ஜ் சோரோஸ் விவகாரம்... ஓம் பிர்லாவிடம் நேராக சொன்ன ராகுல் - பரபரக்கும் டெல்லி
நாடாளுமன்றத்தில் அதானி நிதி முறைகேடு விவகாரங்களை காங்கிரஸ் எழுப்பி வருகிறது. மறுபுறம் அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரோஸ் உடன் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக பாஜக முழக்கமிட மக்களைவை முடங்கிவருகிறது. இந்த வேளையில் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, மக்களவை சுமூகமாக நடைபெற வேண்டும், விவாதம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் தெரிவித்ததாகவும், அவர் அதைப் பார்ப்பதாக கூறினார் எனவும் தெரிவித்தார்.
தன்னை பற்றி ஆளும் கட்சியினர் என்ன சொன்னாலும் சரி 13 ஆம் தேதி மக்களவையில் இந்திய அரசியல் சாசன 75 வது தினம் குறித்து விவாதம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார். அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை என குறிப்பிட்ட ராகுல்காந்தி, கடைசி வரையில் நாங்கள் அதனை விடப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.