பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை வெளியிட்ட பிரதமர் மோடி
டெல்லியின் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால வரிசையில் பாரதியின் படைப்புகள் என்று வடிவமைக்கப்பட்டுள்ள புத்தகத்தை அவர் வெளியிட்டார். 23 தொகுப்புகளில் அவரது முழுமையான படைப்புகள் விளக்கங்களோடு சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, சுப்ரமணிய பாரதியை போன்ற ஆளுமை நூற்றாண்டிற்கு ஒரு முறையே கிடைப்பார்கள் என்றார். பாரதியாரின் சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை எல்லாம் இன்னும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவதாகவும், அவை இன்றும் நம்மை ஊக்கப்படுத்துவதாக தெரிவித்த பிரதமர் மகாகவி பாரதியின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம் என குறிப்பிட்டார்.
Next Story