தண்டவாளத்தில் சிக்கிய பெண் கால்.. காயமேயின்றி தப்பிய சாமர்த்தியம் - நம் கண்ணே நம்ப மறுக்கும் காட்சி
தெலங்கானாவில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில், சாதுர்யமாக செயல்பட்டு அப்பெண் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். நவான்ஹி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த பெண் ஒருவரின் கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அதேநேரத்தில் அந்த வழியாக சரக்கு ரயில் வந்த நிலையில், ஆபத்தை உணர்ந்த பெண், ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தண்டவாளங்களுக்கு இடையே தன்னுடைய உடலை குறுக்கி படுத்துக்கொண்டார். இதனால், அவர் மீது மோதாமல் அந்த சரக்கு ரயிலின் அனைத்து பெட்டிகளும் கடந்து சென்றன.
Next Story