ஆண் போலீசை கன்னத்தில் பளார் என அறைந்த பெண்.. திருப்பி தாக்கிய பெண் போலீஸ் - வைரலாகும் வீடியோ
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஆஷா திட்டத்தில், சமூக சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,
காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, ஆஷா ஊழியர்கள் ஐதராபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசாரை அங்கு குவித்திருந்தனர். பெண் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஷா ஊழியர்களை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்ற நிலையில், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கையை பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார். கையை பிடித்து பலவந்தமாக லாரியில் ஏற்றிய ஆண் போலீசாரை ஆஷா ஊழியர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அந்த பெண்ணை பெண் போலீசார் பின்னர் பதிலுக்கு தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.