ரயிலில் பயணம் செய்வோரை குறிவைத்து ஒரே மாதத்தில் 5 கொலைகளை அரங்கேற்றிய ஆசாமி போலீசில் சிக்கியுள்ளார்.
குஜராத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜத்தை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. கிட்டத்தட்ட 2 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் குஜராத்தின் வாபி ரயில் நிலையத்தில் ராகுலைக் கைது செய்தனர். யாராவது தனியாக இருந்தால் அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து விட்டு, கொலை செய்ததும், பெண்கள் என்றால் கற்பழித்து கொலை செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்த ராகுல், குறிப்பாக ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டியைக் குறிவைத்துத் தான் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளார். கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய நிலையில், இறுதியாக 19 வயது இளம்பெண்ணைக் கொன்று விட்டு ரசித்து ருசித்து உணவு சாப்பிட்டதும் கேமராவில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.