"பையில் இருந்த அதிசய பொருள்" வார்த்தை வலையில் சிக்கிய மூதாட்டி.. மர்ம கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

x

புதுச்சேரி அம்பலதடையார் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கஸ்தூரி என்பவரிடம், மர்மநபர்கள், இலங்கையில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதனை குறைவாக விற்பனை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு கஸ்தூரி தன்னிடம் பணம் இல்லை எனக் கூற, அதற்கு அந்த நபர்கள் பணத்திற்கு பதிலாக முதியவர் அணிந்திருக்கும் தங்கச் செயின் மற்றும் மோதிரத்தை கேட்டுள்ளனர். மர்மநபர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி, அவர்களிடம் இருந்து டாலர் ஒன்றினை பெற்றுக் கொண்டு, தங்கச் செயின் மற்றும் ஒரு சவரன் மோதிரத்தை கொடுத்துள்ளார் முதியவர். பின்னர் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வருவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்ற மர்மநபர்கள் திரும்பி வராததால், முதியவர் கஸ்தூரி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புகார் அளித்ததன் பேரில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயவேல், நள்ளா முகமது உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்