மகாகவி பாரதியார் பிறந்தநாள் - பவன் கல்யாண் புகழாரம்
மகாகவி பாரதியார் தனது எழுத்துக்கள் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். பாரதியார் பிறந்தநாளையொட்டி, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாரதியார் ஒரு கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றும், தனது காலத்தால் அழியாத எழுத்துக்கள் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் என்ற பாரதியாரின் கவிதையை குறிப்பிட்டுள்ள பவன் கல்யாண், பாரதியார் கற்பனை செய்த இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றிக் கொண்டாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story