ரயில்கள் தாமதம்...ஒரே இடத்தில் கூடிய பயணிகள் - திக்குமுக்காடிய ஸ்டேஷன்
மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், உள்ளூர் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரயில்கள் தாமதமாகின. போரிவலி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அனைத்து புறநகர் ரயில்களும் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாகச் சென்றன. மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் நிலையில், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் முதல் தஹானு வரை, வழக்கமாக ஆயிரத்து 300 புறநகர் சேவைகள் இயக்கப்படும் நிலையில், இவற்றில் சுமார் 3 லட்சம் பயணிகள் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story