வீதிக்கு வந்த குடும்ப மானம்... விரட்டி விரட்டி அடித்த மோகன் பாபு - தந்தைக்காக மகன் சொன்ன வார்த்தை

x

பிரபல நடிகர் மோகன்பாபு பத்திரிகையாளரை தாக்கியது தொடர்பாக அவரது மகன் மஞ்சு விஷ்ணு வருத்தம் தெரிவித்துள்ளார். மோகன்பாபுவிற்கும் அவரது மகன் மனோஜ் மஞ்சுவிற்கு இடையே சொத்து தகராறு நீடித்து வரும் நிலையில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன்பாபு தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு, பத்திரிகையாளர்கள் கேட்டை தள்ளிகொண்டு வந்து தந்தையின் முகத்தில் மைக்கை இடித்ததால், அவ்வாறு நடந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். காயமடைந்த பத்திரிகையாளருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்