JUSTIN || பிரபல நடிகர் திடீர் தலைமறைவு? அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர் மோகன் பாபு, பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் பஹடிஷரீஃப் காவல்துறையிடம் வெள்ளிக்கிழமை தனது ஜல்பல்லி இல்லத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் கிடைக்கவில்லை.
நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருந்த மூத்த நடிகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மோகன்பாபுவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஜலப்பள்ளி என்ற இடத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, வசித்து வருகிறார். இவருக்கும், இவரது இளைய மகனும், நடிகருமான மஞ்சு மனோஜுக்கும் இடையே நீண்டகாலமா நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.