பிரபல நடிகர் குடும்பத்தில் பூகம்பம்.. வீதியில் கப்பலேறிய மானம்
``பொண்டாட்டி பேச்சை கேட்டு நெஞ்சுலயே எட்டி மிதிச்சிட்டியேடா’’ - பிரபல நடிகர் குடும்பத்தில் பூகம்பம்.. வீதியில் கப்பலேறிய மானம்
நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகனுக்கும் இடையேயான குடும்ப பிரச்சினை உக்கிரமான நிலையில், வீட்டுக்குள் நுழைந்த மகனை விரட்டியதோடு, செய்தியாளர்களையும் மோகன்பாபு தாக்கியது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்...
தெலுங்கு சினிமாவில் 1974ஆம் ஆண்டு அறிமுகமாகி, தற்போது வரை மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர், மோகன் பாபு. தமிழில் மெகா ஹிட்டான ‘நாட்டாமை‘ படத்தின் தெலுங்கு வெர்ஷனில், சரத்குமார் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மோகன் பாபு.
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், தமிழிலும் 80ஸ்களில் சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 2020ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று‘ படத்தில் விமானப்படை அதிகாரியாக மிரட்டியுள்ளார்.
இப்படி பிரபல நடிகராக வலம் வரும் மோகன் பாபுவின் குடும்பத்தில், சொத்து பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
மோகன் பாபுவும், அவரது மகன் மஞ்சு மனோஜும், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ஒருவர் மீது ஒருவர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜின் படிப்புக்காக நிறைய செலவு செய்தேன் என்றும், மனைவியின் பேச்சைக் கேட்டு தனது இதயத்தில் மனோஜ் எட்டி உதைத்தான் என்றும் மோகன் பாபு குற்றம் சாட்டினார்
இந்த நிலையில், ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டுக்குள், மகன் மஞ்சு மனோஜ், தனது நண்பர்களுடன் நுழைய முயன்றார். அவர்களை, போலீசார் தடுத்து விரட்டியடித்தனர்.
அப்போது, நிகழ்ந்த சம்பவத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த செய்தியாளர்களையும் வெளியே தள்ளி விட்டனர். மேலும், மைக்கை பிடுங்கி, செய்தியாளரை சரமாரியாக நடிகர் மோகன் பாபு தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மோகன்பாபு தாக்கியதில் செய்தியாளர்கள் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தந்தை, மகன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காாக, சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரச்கொண்டா காவல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். தந்தையும் மகனும் சமரசம் அடைவார்களா? என திரையுலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.