யார்? அமித்ஷா எடுத்த முடிவு - நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பு இன்று

x

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களைக் கடந்த பின்னரும் அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரை தீர்மானிப்பது குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் மகாயுத்தி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர், யார் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு, எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள், அவர்களுக்கு என்னென்ன இலாகா என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையின் முடிவில் தேவேந்திர ஃபட்னவிசை முதல்வராக்குவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்