பிரசவ தையல் போட்ட இடத்தில் கசிந்த ரத்தம்..திடீரென வெளியே வந்த வெள்ளை பொருள் - சிக்கிய பெண் டாக்டர்
கேரளாவில் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சை வைத்து மகப்பேறு மருத்துவர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஹரிப்பாடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தையல் போட்ட இடத்தில் தொடர்ந்து ரத்த கசிவும் வலியும் இருந்துள்ளது. மீண்டும் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, முதல் அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தையல் போட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் மருத்துவர் ஜெயின் ஜேக்கப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story