#JUSTIN | "கணவரை கருப்பன் என அழைப்பது கொடுமையானது" - கொதித்தெழுந்த நீதிமன்றம்

x

"நிறத்தை குறிப்பிட்டு அவமதிப்பது கொடுமையானது"

"நிறத்தை குறிப்பிட்டு ஒருவரை அவமதிப்பது கொடுமையானது"

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய கணவருக்கு, விவாகரத்து வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கருப்பு நிறமுடையவர் என்ற காரணத்திற்காக மனைவி அவரை அவமானப்படுத்தியது கணவர் தரப்பில் வாதம்

அத்தகைய குற்றச்சாட்டு யாருக்கு எதிராக முன்வைக்கப்படுகிறதோ, அவர் மிகப்பெரிய மனக் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்ற முடிவுக்கு வரலாம்.

கணவரை அவரது கருப்பு நிறத்தை குறிப்பிட்டு மனைவி அவமதிப்பது கொடுமையானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அதை மையமாக வைத்து 44 வயது நபருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணமாகி பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து ஏற்பட்டு வந்த குடும்ப தகவலாக காரணமாக கடந்த 2012ம் ஆண்டில், கணவர் விவாகரத்து கோரி பெங்களூருவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார்.

அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அலோக் ஆராதே, அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கருப்பு நிறமுடையவர் என்ற காரணத்திற்காக மனைவி அவரை அவமானப்படுத்தியது கணவர் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், தனது கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக குற்றம் சாட்டினார். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனைவி குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாகவும், தனக்கு குழந்தை இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மனைவி தரப்பு வாதங்களின் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் 2017 இல் விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்தார். சுமார் ஆறு ஆண்டு காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கணவன் வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மேலும் மனைவி கணவனின் நிறத்தை பற்றி பேசி இருப்பது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்., அத்தகைய குற்றச்சாட்டு யாருக்கு எதிராக முன்வைக்கப்படுகிறதோ, அவர் மிகப்பெரிய மனக் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்ற முடிவுக்கு வரலாம். இந்த உண்மையை குடும்பநல நீதிமன்றம் ஆலோசிக்கவே இல்லை. கணவரை கருப்பன் என அழைப்பது கொடுமையானது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கணவனின் கருமையான நிறம் காரணமாக திருமணத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்பதை கணவன் சமர்ப்பித்துள்ள பதிவில் உள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதாகவும், இதுவே திருமணத்தை கலைப்பதற்கான ஆணையை குடும்ப நீதிமன்றம் வழங்க போதுமானதாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறிய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து கணவர் கூறிய விவாகரத்தை அவருக்கு வழங்குவதாக உத்தரவு பிறப்பித்தது. கணவரை நிறம் காரணம் காட்டி ஒதுக்கிய மனைவிக்கு அதுவே வழக்கின் மூலம் ஆதாரமாக அமைந்து கணவரின் விருப்பப்படி விவாகரத்து கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்