சூரியனை குறி வைக்கும் இஸ்ரோ - இன்று 11.50 மணிக்கு..

x

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-ஒன் விண்கலம், இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக 423 கோடி ரூபாய் செலவில், ஆதித்யா எல்-ஒன் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.,சி-57 ராக்கெட் மூலம், இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 127 நாட்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, லெக்ரேஞ்சியன் ஒன் என்ற புள்ளியில் விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. சூரியனின் வெளிப்புற வெப்பச்சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை ஆதித்யா எல்-ஒன் விண்கலம் மேற்கொள்ள உள்ளது. மேலும் 5 ஆண்டு கால ஆயுட்காலம் வரை, ஆதித்யா எல்-ஒன் விண்கலம் இடைவிடாத பணியை மேற்கொள்ள உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நான்காவது நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்