இந்திய கடற்படையும் இஸ்ரோவும்... பறந்த வெற்றிக்கொடி | ISRO | NAVY | Thanthi TV

x

இந்தியக் கடற்படையும் இஸ்ரோவும் இணைந்து ககன்யான திட்டத்தின் வெல்-டெக் மீட்பு பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றான குழு கேப்சூல் மீட்பு நடவடிக்கையை துல்லியமாக செயல்படுத்த, இந்த பயிற்சி, கிழக்கு கடற்படை வெல்-டெக் கப்பலில் நடத்தப்பட்டது. கப்பலின் வெல்-டெக் பகுதியை தண்ணீரால் நிரப்பி, கடலில் இறங்கும் குழு, கேப்சூல் மாதிரியை உள்ளே கொண்டு செல்வதற்கான நடைமுறை சோதிக்கப்பட்டது. மொத்தம் மூன்று நடைமுறைகள் இந்த மீட்பு பணியின் போது செயல்படுத்தப்பட்டது. கேப்சூல் கடலில் தரையிறங்கியதும் மீட்பு செய்யும் செயல்முறை இணைப்பைச் முதலில் செயல்படுத்தினர். கப்பலுக்குள் கேப்சூலை இழுத்து கொண்டு சென்று நிலைநிறுத்தினர். பின்னர் வெல்-டெக்கின் நீரை வெளியேற்றி, கேப்சூலை வெற்றிகரமாக நிலை நிறுத்தினர். இந்த சோதனை, ககனியான் திட்டத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கான தரநிலைக் கோட்பாடுகளை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய மற்றும் எதிர்பாராத சூழல்களில் குழு மீட்புக்கு முழுமையான தீர்வுகளை வழங்கும் முக்கிய கட்டமாகும்.


Next Story

மேலும் செய்திகள்