கண்ணீர் விட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, 4 நாட்கள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவு தூணிற்கு சென்று, போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத் தினருடன் உரையாடி நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார். 2001-ஆம் ஆண்டு போரில் உயிரிழந்த ராமகிருஷ்ணன் என்பவரின் தாயார் பேசுகையில், தன்னை பார்த்ததும் குடியரசுத்தலைவர் கண் கலங்கியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Next Story