மதுபான கொள்கை வழக்கு.. பாஜகவிற்கு நிதியளித்த கைதானவர் - தேர்தல் பத்திரத்தில் அதிர்ச்சி தகவல்

x

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் அப்ரூவராக மாறியவரிடம் இருந்து பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மனிஷ் சிசோடியா,

தெலுங்கான முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள், இந்த வழக்கு பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்துகிறது.

2022 நவம்பரில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரத் ரெட்டி, அதன் பிறகு, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு 34.5 கோடி ரூபாய் வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

2023 மே மாதத்தில் பிணையில் விடுதலையான சரத் ரெட்டி, 2023 ஜூனில் அமலாக்கத் துறைக்கு ஆதரவாக, அப்ரூவராக மாறினார்.

அதே சமயத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு, சரத் ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்