பெங்களூர் கொலை...திடுக் திருப்பம்

x

நாட்டையே அதிரச் செய்த பெங்களூரு கொலை வழக்கில், சந்தேக குற்றவாளியை தேடிச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

நாட்டை அதிரச் செய்த பெங்களூரு கொலை வழக்கு

29 வயது பெண்ணான மகலாட்சுமி என்பவர், கர்நாடகாவின், வயாலிகாவல் பகுதியில் 30 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்திருந்தது...

கணவரை பிரிந்து வாழ்ந்த மகாலட்சுமி.. மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்...

மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றி, போலீசார் துப்பு துலக்கியதில் ஒருவர் சிக்கி இருந்தார்..

WA1 5716 துண்டுகளாக வெட்டி ஃபிர்ட்ஜில் வைக்கப்பட்ட பெண்ணின் உடல்

அவர்தான் இந்த முக்தி ரஞ்சன்...

மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான முக்தி ரஞ்சனும், கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்..

மகாலட்சுமியுடன் முக்தி ரஞ்சன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவர, அவரை தொடர்பு கொண்ட போலீசார், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதை அறிந்து வலை வீசி தேடி வந்தனர்..

சந்தேக குற்றவாளி திடீரென கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை

இதில், ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள புயின்பூர் கிராமத்தில், முக்தி ரஞ்சன் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை சடலமாக கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்..

கடிதம் எழுதிவைத்து விட்டு திடீரென தற்கொலை செய்திருக்கிறார் முக்திரஞ்சன்...

சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்திருக்கும் போலீசார், சம்பவ இடத்திலிருந்து மடிக்கணினி மற்றும் பைக் ஒன்றுடன், தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்...

தற்கொலையா..? - போலீசார் தீவிர விசாரணை

தற்கொலை கடிதம் தற்போது வழக்கின் ஆவணமாக இருப்பதால், நீதிமன்றத்தில் சமர்பித்த பிறகு அதில் குறிப்பிட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர் போலீசார்..

இதனிடையே, இந்த மரணம்.. தற்கொலைதானா அல்ல கொலையா என சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், வழக்கு உச்சகட்ட பரபரப்பில் தகிக்க தொடங்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்