அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரம்மாண்ட பூட்டு! பிரமிக்க வைத்த கலைஞர்!

x

கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் 2020ம் ஆண்டு முதல் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது.

2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படும் கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராம குண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மீகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்காக பிரம்மாண்ட பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார் பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் ஷர்மா.

உத்திரபிரதேச மாநிலம், அலிகர் பகுதியில் பூட்டு தயாரிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த இவர், தான் சிறுக சிறுக சேகரித்த வாழ்நாள் சேமிப்பில் இந்த பூட்டை தயாரித்துள்ளார்.

சுமார் 10 அடி உயரம், 4.5 அடி அகலத்துடன் வடிமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட பூட்டை தயாரிக்க

2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த பூட்டின் சாவியின் நீளமோ சுமார் 4 அடியாம்.

தனது மனைவி ருக்மணி உதவியுடன் பூட்டை தயாரித்த சத்ய பிரகாஷ் ஷர்மா, இந்த பூட்டை தயாரிப்பது தனது கனவு என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை நிர்வாகிகள், இந்த பூட்டை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ராமர் கோவிலின் கருவறை கட்டுமான பணி முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரதிஷ்டை செய்வதற்காக வரும் ஜனவரி மாதத்தில் 21,22,23 என 3 தேதிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் ஒரு தினத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்