அவர் வேலையை அவர் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாட்டில் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரத்து 75 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில், ஆதிகேசவ பெருமாள் கோயில் சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5 ஆயிரத்து 770 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு, புதிய மரத்தேர் செய்வதற்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், குடமுழுக்கு விழாக்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழிசை தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளர் அல்ல என்றும், புதுச்சேரியில் ஆளுநருக்கான பணிகளை அவர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.