இன்றைய தலைப்புச் செய்திகள் (09-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ரூ.6,000 நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

ரேஷன் கடை மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்வு...

சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாசன பயிர்களுக்கான நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 17ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்...

பல்லாண்டு பயிர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு...

சேதமடைந்த படகு, மீன்பிடி உபகரணங்களுக்கு நிவாரணம்

முழுமையாக சேதமடைந்த கட்டுமரம், மீன்பிடி உபகரணங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

முழுமையாக சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும், இயந்திர படகுகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு...

"மழை வெள்ள பாதிப்பு - தடுக்க தவறிவிட்டது அரசு "

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டதாக, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

திருவொற்றியூரில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின் பேட்டி...

"ரூ.4,000 கோடி வடிகால் பணி - விவாதிக்க தயார்"

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தயார்...

எதிர்கட்சிகள் தூண்டிவிட்டு வீடியோ வெளியிடுவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு...

"வடிகால் பணி - வெள்ளை அறிக்கை வெளியிடுக"

சென்னையில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்....

தமிழக அரசுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்....


Next Story

மேலும் செய்திகள்