"காங்., தலைவர்களை சுட்டு கொல்ல வேண்டும்.." - பிரளயத்தை கிளப்பிய `பாஜக' ஈஸ்வரப்பாவுக்கு சிக்கல்

x

நாட்டை பிரிப்பதாக பேசுபவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியதைத் தொடர்ந்து அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரேஷ், காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி ஆகியோர் தேச விரோதிகள் என்றும், அப்படிப்பட்டவர்களை கொல்லும் சட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்த வேண்டும் எனவும் கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். தாவணகெரேவில் நடைபெற்ற புதிய மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பேசிய ஈஸ்வரப்பா, இது போன்ற துரோகிகளை கட்சியில் இருந்து வேரறுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒன்றுதான் என்றும், தென்னிந்தியாவை பிரிக்க வேண்டும் என்று தெரிவித்த டி.கே. சுரேஷ், வினய் குல்கர்னி போன்றவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இதுபோன்று பேசுபவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் இயற்ற பிரதமர் மோடியிடம் முறையிடுவேன் என பேசினார். பாஜக மூத்த தலைவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தாவனகரே மாவட்டத்தைச் சேர்ந்த அனுமந்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்