இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழக உள்துறை செயலாளர் அமுதா இன்று திடீர் பணியிட மாற்றம்...
திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை...
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தியுள்ளார். கூடுதல் நிதி சுமை இருந்த போதும், சிறிய அளவிலேயே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. விவரிக்கின்றனர், செய்தியாளர்கள் ராமசாமி மற்றும் சோனைமுத்தன்...
தமிழ்நாட்டுக்கு கர்நாடகா நீர் தர மறுப்பதை ஏற்க முடியாது என, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை, உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர் பாஸ்கரன் வழங்கிய தகவல்கள் இவை...
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக, டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நிதியாக டிரம்ப்புக்கு மாதம்தோறும் 375 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனிடையே, ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.