இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
சென்னை அயனாவரம் இல்லத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆறுதல்...
விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஐ.ஜி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி...
ரவுடி என்று தன்னை அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்...
ஜூலை 29 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமென மாநகராட்சி ஆணையர் இன்று அறிவிப்பு...
கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு இன்று நேரில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துவோம் என உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் பாஸ்கரன்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இன்று முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் டீசல் பற்றாக்குறை ஏற்படுவதாக ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. செய்தியாளர் கோபிநாத் வழங்கிய தகவல்கள் இவை....
ரூட் தல விவகாரத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரையில் ஏறி அடாவடி செய்துள்ளனர். சாலையை மறித்து பட்டாசு வெடித்து கொண்டாடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்...