இன்றைய தலைப்பு செய்திகள் (23-11-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"கொள்ளை அடிப்பது காங். பாரம்பரியம்"

ராஜஸ்தானில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரம்...

கொள்ளையடிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு...

"டீப் ஃபேக் பிரச்சினை - புதிய வழிமுறை"

Deep fake தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள, விரைவில் புதிய வழிமுறைகள்...

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்...

தமிழகத்திற்கு 2,700 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

தமிழ்நாட்டிற்கு, நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும்...

நிலுவை தண்ணீரை திறந்து விடவும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை...

"நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் - மிக கனமழை"

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்...

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

"தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்"

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

கன்னியாகுமரியில் கனமழை - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை...

பொத்தோட்டு குளம் நிரம்பி வெளியேறிய தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி...

10 பழங்குடியின மலை கிராமங்கள் துண்டிப்பு

கோத்தகிரி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், 50 மீட்டர் நீளத்திற்கு அடித்து செல்லப்பட்ட சாலை...

10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு...


Next Story

மேலும் செய்திகள்