"மிருகத்துக்கு கூட மரியாதை ஆனா.." - நீதிமன்றம் முன் கண்ணாடி துண்டை வைத்து இளைஞர் தற்கொலை மிரட்டல் - 1மணி நேரம் திணறிய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

x

கழுத்தில் உடைந்த கண்ணாடி துண்டை வைத்துக்கொண்டு வேலூர் நீதிமன்ற வளாகம் முன்பு இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியது பரபப்பை ஏற்படுத்தியது.

வேலூர் அடுத்த தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் சங்கர். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு கைக்கலப்பாக மாறியதில், அங்கிருந்த காவலர்கள் இளைஞரை கண்டித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு அமர்ந்து, கழுத்தில் உடைத்த கண்ணாடித் துண்டை அழுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி இளைஞர் போராட்டம் நடத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞருடன் மல்லக்கட்டி அவரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்