கூகுள் மேப்பை நம்பி 30 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் - சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

x

கேரள மாநிலம் தொடுபுழா அருகே கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால், வழி தவறிய சுற்றுலா பயணி பாறையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எட்டு பேர் கொண்ட குழு தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதிக்கு சென்றனர். அங்கு கூகுள் மேப் மூலம், கிழார் குன்று நீர் வீழ்ச்சியை காண சென்றனர். மலையிஞ்சி பகுதி வரை வாகனத்தில் பயணித்து பின்னர், அங்கிருந்து, கூகுள் மேப் உதவியுடன் நீர் வீழ்ச்சியை நோக்கிச் சென்றனர். கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர்திசையில் 4 கி.மீ. துாரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி திரும்ப இயலாமல் தவித்தனர். இதனிடையே அக்குழுவை சேர்ந்த ஜிஜூ ஜேம்ஸ் என்பவர், எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த கரி மண்ணுார் போலீசார், காவல் துறை உதவி ஆய்வாளர் பிஜூ ஜேக்கப் தலைமையில் போலீசார் வெகு நேரம் போராடி சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர், தொடுபுழா தீயணைப்பு துறை, வனத்துறை உதவியுடன் ஜிஜூ ஜேம்ஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்