"இனி போர் அடிக்காமல் 'chat ' செய்யலாம்" - அப்டேட்ஸ்களை அள்ளிவீசிய வாட்ஸ் அப்..!

x

பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... பேங்கில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ... நிச்சயம் வாட்ஸ் அப்பில் அக்கவுண்ட் இருக்கும்..! அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக பின்னி பிணைந்து விட்டது... இந்த வாட்ஸ் அப்.

OTP நம்பர் மட்டும் மொபைல் நம்பருக்கு வரவில்லை என்றால்... நாம் கடந்து வந்த மெசேஜிங் பாதையையே என்றோ மறந்திருப்போம்..!

இன்றோ மொபைல் கால் என்றாலும் வாட்ஸ் அப் தான்... வீடியோ கால் என்றாலும் வாட்ஸ் அப் தான்..!

ஊருல யார் யார் என்ன பண்ணிட்டு இருங்காங்கன்னு... ஒரு கால் கூட பண்ணாம... நாம இருக்குற இடத்தில இருந்தே தெரிஞ்சிக்க முடியுதுணா அது நிச்சயம் வாட்ஸ் அப்பில் வரிசை கட்டி போடப்படும் ஸ்டேட்டஸ்களால் தான்..!

இன்னொரு புறம்... ஸ்டிக்கர் அனுப்பி விளையாடும் ஒரு கூட்டமும் உண்டு..! ஆமாங்க.. 'வார்த்தை தேவையில்லை வாழும் காலாம் வரை பாவை எமோஜி மொழி பேசுமே...' என்று பாட்டே பாடி விடலாம்..! அந்த அளவிற்கு சிலர் வாட்ஸ் அப் ரிப்ளையை வெறும் ஒற்றை எமோஜியில் முடிந்துவிடுவார்கள்.

ஆனா நமக்கு தெரிஞ்சதுலாம் வெறும் 4 எமோஜி தாங்க என்று... அதையே ரிப்பீட் மோடில் அனுப்பி போர் அடிப்பவரா நீங்கள்..? இனி உங்கள் உரையாடல்களை ஸ்வாரஸ்யமாக்க வருகிறது, எமோஜியுடன் கூடிய அவதார்கள்...

நீங்களும் இனி வாட்ஸ் அப்பில் அவதாரம் எடுக்கலாம், கார்டூன் வடிவில்.. இந்த அவதார்களை ஸ்டிக்கராக மட்டுமின்றி, வீடியோ கால் பேசும் போதும் சரி... Profile பிக்சராகவும் சரி... மாற்றி கொள்ளலாம். அப்படி ஒரு featureரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது, வாட்ஸ் அப்.

இன்னொரு அப்டேட் என்னவென்றால்.. ஏற்கனவே எப்படி ஒரே நேரத்தில் 32 பேர் வாட்ஸ் அப் வாய்ஸ் காலில் ஒன்றிணைந்து கலந்துரையாட முடியும் என அறிவித்திருந் ததோ... அப்படி இம்முறையும் வீடியோ காலிலும் ஒரே நேரத்தில் 32 பேர் இணையும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறதாம், வாட்ஸ் அப் நிறுவனம்.

இந்த அப்டேட் நிச்சயம் zoom போன்ற வீடியோ கால் ஆப்களுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 8 பேர் வரை ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ காலில் கலந்துரையாட முடிகிறது. அதோடு, கால் லிங்கை ஷேர் செய்வதன் மூலம் 32 பேர் வரை வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்ய இருப்பதால் ஒருவேளை நாம் குரூப் காலை மிஸ் செய்தால் கூட... நாம் பார்க்கும் போது லிங்கை கிளிக் செய்து குரூப் வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம்.

இப்படி அப்டேட்ஸ்களை அள்ளிவிட்டு வரும் வாட்ஸ் அப்... தன்னை அப்கிரேட் செய்து கொள்ள தயாராகி வருவதோடு, பயனாளிகளையும் குஷியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்