14 ஆண்டுகளாக வீட்டில் வேலை பார்த்த பெண்..! வீடு கட்டித் தந்து அழகு பார்த்த குடும்பம்

x

தொட்டுமுக்கம் பகுதியைச் சேர்ந்த சிரியக் ஜோஸ் மற்றும் அவரது தங்கை மேரி குட்டி ஆகியோரது குடும்பத்தினர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த சிந்து என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கண்பார்வையற்ற கணவர் மற்றும் 3 பிள்ளைகளை தனது வீட்டு வேலை மூலம் பராமரித்து வந்த சிந்துவுக்கு உதவும் வகையில் சிறிய ஜோசும், மேரி குட்டியும் 5 சென்ட் நிலமும் வழங்கி அந்த நிலத்தில் அழகான வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளனர்... வீட்டில் வேலை பார்க்கும் பெண் தானே என வெறும் ஊதியத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாது, தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல அப்பெண்ணிற்கு வீடு கட்டித் தந்த குடும்பத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது...


Next Story

மேலும் செய்திகள்