“நன்றி மட்டும்தான் சொல்லனும் தலைவியை கேள்வி கேட்க கூடாது“ - பெண் கவுன்சிலரின் பரபரப்பு புகார் ஆடியோ

x

மதுரை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் நேற்று முன்தினம் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரை மாநகராட்சியின் 54வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான நூர்ஜஹான், தனது வார்டில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மண்டல தலைவரின் கணவர் மிசா பாண்டியன், நூர்ஜஹான் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், அடிக்கப் பாய்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாநகர காவல் ஆணையரிடம் நுார்ஜஹான் புகார் அளித்துள்ள நிலையில், புகார் குறித்த அவரது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்