பஸ் வருமா..?வராதா..? - மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

x
  • மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் முன்பு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மேலூர், தாலுகாவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • இதனிடையே, இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
  • இதைக் கண்டித்து, ஏராளமான பெண்கள் இணைந்து பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதையடுத்து, போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்