இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வருமா? | srilanka | india | thanthi tv

x

இலங்கையைப் போன்ற பொருளாதார சீர்குலைவு, இந்தியாவில் ஏற்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என்று தலைமை கணக்குத் தணிக்கை துணை அதிகாரி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இந்திய கணக்குத் தணிக்கைத் துறையின் வார நிறைவு விழா, சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, பொதுத்துறை வங்கிகளில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகை, சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும், பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீனிவாசன், பொதுத் துறை வங்கிகள், தணிக்கை துறையின் கட்டுப்பாட்டில் இல்லாததால், பெரிய நிறுவனங்கள் தள்ளுபடி பெறுவதை கண்காணிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றார். மேலும், இலங்கையைப் போன்றதொரு பொருளாதார சீர்குலைவு, இந்தியாவில் ஏற்பட ஒருபோதும் வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர், இலங்கை, வெளிநாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்