வரலாற்றை திருத்தி எழுதுமா இந்தியா... நம்பிக்கையாக நிற்கும் கோலி - ரகானே - 1976 -ல் ஆனது போல் மீண்டும் நடக்குமா..?

x

நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் அடுத்து களமிறங்கிய கோலி, ரகானே ஜோடி நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 44 ரன்களுடனும், ரகானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படும் நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் களமிறங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்