ஈவு இரக்கமின்றி மனைவி கொலை..கணவன் போட்ட தற்கொலை நாடகம்..விசாரணையில் கலைந்த வேஷம் | Virudhunagar

x

திருச்சுழி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கும், முத்துவள்ளி என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே, லாரி ஓட்டுநரான பழனிக்கு, மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி, கணவரின் வீட்டில் முத்துவள்ளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததால், இதனை சந்தேக வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இந்த நிலையில், உயிரிழந்த முத்துவள்ளியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பழனியிடம் தங்களது பாணியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவியை அடித்துக் கொன்று நாடகமாடியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பழனியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்