ஆசை ஆசையாய் நடந்த திருமணம்... திடீரென வாழ மறுத்த காதல் கணவன் - வீட்டு வாசலிலேயே உயிரை விட்ட மனைவி

x
  • மதுரை அருகே சேர்ந்து வாழ மறுத்த காதல் கணவனின் வீட்டு முன்பு, இளம்பெண் விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரியும், நவீன் பிரகாஷூம் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
  • இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், நவீனின் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனிடையே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, நவீன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
  • இந்த நிலையில் பாண்டீஸ்வரி நவீனின் வீட்டுக்குச் சென்று, அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார்.
  • நவீனின் பெற்றோரோ, நவீன் வெளியூருக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டீஸ்வரி, விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
  • மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்