ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு யார் பிரதமராக வேண்டும்? - மோடி செல்வாக்கை சரித்த ராகுல் 'சொல்வாக்கு'
- எங்கள் ஆட்சி ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது"
- ஏழைகளை லட்சாதிபதி ஆக்கியிருக்கிறோம் - பிரதமர் மோடி
- "ஏழைகளின் கண்ணியத்தை எங்கள் அரசு நிலைநாட்டும்"
மத்தியில் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி, ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்கிறார் பிரதமர் மோடி... ஏழைகளுக்கு சமையல் ஏரிவாயு, கழிப்பறை, வங்கி கணக்கு, குடிநீர், வீடு, ரேஷன் என பல திட்டங்களை வழங்கியி ருப்பதாக பட்டியலிடும் பிரதமர் மோடி, ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததன் வாயிலாக அவர்களை லட்சாதிபதி ஆக்கியிருப்பதாகவும் குடும்ப தலைவிகளை அதற்கு உரிமையாளர் ஆக்கியிருக்கிறோம் எனவும் தெரிவிக்கிறார்.
சமூகநீதிக்காக தனது அரசு பணியாற்றுவதாக கூறும் பிரதமர் மோடி, சமச்சீர் வளர்ச்சியும் நாட்டின் நலனுக்கு முக்கியம் எனக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநாட்டவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பாடுபட்டு வருகிறது எனவும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது, அவர்களது கனவை நிறைவேற்றுவதே தங்கள் பணியெனவும் உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி