யார் முதலில் போவது? அரசு - தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு
நாகை அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கும், தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்ற போது அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு இடையே, பயணிகளை ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், அரசு பேருந்து முந்திச் செல்ல, தனியார் பேருந்து ஓட்டுநர் இடம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், ஓடாச்சேரி அருகே பேருந்தை நிறுத்தி சண்டையில் ஈடுபட்டார். சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி ஓட்டுநர்கள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story