டிபியாக வைத்த குடும்ப போட்டோவை தவறாக எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் - சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சேலம் எடப்பாடியை சேர்ந்த கார்த்திக், தனது குடும்ப புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் டிபியாக வைத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை சரத்குமார் என்பவர் தவறாக எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டதோடு, அதனை நீக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து கார்த்தில் அளித்த புகாரின் பேரில், சரத்குமாரை சேலம் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சரத்குமார் இதேபோல் பலரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
Next Story