"சிறிதும் வெட்கமின்றி" - ரஷ்ய அதிபர் புதின் மீது சீறிய அமெரிக்க அதிபர் பைடன் - கூறியது என்ன?
"சிறிதும் வெட்கமின்றி" - ரஷ்ய அதிபர் புதின் மீது சீறிய அமெரிக்க அதிபர் பைடன் - கூறியது என்ன?
மேற்கு நாடுகள் அணு ஆயுத மிரட்டல் விடுத்தால் எதிர்த்துத் தாக்க தங்களிடமும் ஆயுத பலம் இருப்பதாக நேற்று ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்... அத்துடன், உக்ரைன் மீதான போரைத் தீவிரப்படுத்தும் விதமாக படைகளை அணி திரட்ட அவர் உத்தரவிட்டது உலகரங்கில் பேசு பொருளாகியுள்ளது... இது குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தின் பொதுஅமர்வில் அமெரிக்க அதிபர் பைடன் உரையாற்றினார். "அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புகளை பொறுப்பற்ற முறையில் புறக்கணிக்கும் வகையில், புதின் ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவித்த பைடன், "ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா வெட்கமின்றி மீறியுள்ளதாக" கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்த பைடன், அதனால் தான் ஐநா பொதுச் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.