கணவனின் தகாத உறவால் பறிபோன உயிர்... - கார் விபத்தா..? கள்ளக்காதலுக்காக கொலையா..?
நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
கையிலே போட்டோக்களுடன் இறந்து போன மகளுக்கு நீதி கேட்டு ஒரு குடும்பமே போராடிக்கொண்டிருந்தது.
ஆசை ஆசையாய் வளர்த்து கட்டி கொடுத்த மகளை திருமணமாகி 20 வருடம் கழித்து தாலிகட்டிய கணவனே கொன்று விட்டு விபத்து என நாடகமாடுவதாக கூறி புலம்பி கொண்டிருந்தனர்.
உண்மையில் நடந்தது கொலையா...? விபத்தா...?என்பதை தெரிந்து கொள்ள விசாரனையில் இறங்கினோம்.
இறந்து போனவர் மேரி கிறிசாந்தி. 44 வயதாகும் இவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கல்குளம் பகுதியை சேர்ந்த எட்வின் ராஜ் என்பவரோடு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 52 வயதாகும் எட்வின்ராஜ் மாலத்தீவில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எட்வின்ராஜின் தங்கைக்கு திருமணம் செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். கல்யாணத்திற்கு ட்ரெஸ் எடுப்பதற்காக, மனைவி மேரி மற்றும் உறவினர்களுடன் கோயம்பத்தூருக்கு காரில் சென்றிருக்கிறார் எட்வின்.
செல்லும் வழியில் கயத்தாறு அருகே கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.அந்த விபத்தில் மேரி கிறிசாந்தி மட்டும் பறிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
ஆனால் உடன் சென்றவர்களுக்கு எந்த வித காயமும் இல்லாமல் இருக்கும் போது, தனது மகள் மட்டும் எப்படி இறந்திருக்க முடியும் என்ற சந்தேகம்
மேரியின் குடும்பத்தினருக்கு வந்திருக்கிறது.
மேலும் மேரியின் கழுத்தில் இருந்த காயங்கள், அவர்களுக்கு நடந்திருப்பது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
எட்வின்ராஜ் தான் மகளை கொலை செய்துவிட்டு, விபத்து
என கூறி நாடகமாடுவதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் காரணம் எட்வின் ராஜின் கள்ளக்காதல் என்று சொல்லப்படுகிறது.
ஆம்..... திருமணமான ஒரு வருடத்திலேயே கணவன் மனைவிக்கிடையே சண்டையும் சச்சரவும் துவங்கி இருக்கிறது.எட்வின்ராஜ் அடிக்கடி மனைவியிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்திருக்கிறார்.இதனால் மேரியின் குடும்பத்தினர் லட்சக்கணக்கில் பணத்தை சீதனமாக கொடுத்து, புகுந்து வீட்டில் வாழ அனுப்பி இருக்கிறார்கள்.
ஆனாலும் எட்வினின் ஆட்டம் அடங்கவில்லை.தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக சொல்லப்படுகிறது.கணவனின் இந்த கொடுமைகளை எல்லாம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி சகித்து கொண்டு வாழ்ந்திருக்கிறார் மேரி. ஆனால் சில நாட்களிலேயே கணவனின் மற்றொரு கோர முகத்தை கண்டு மேரி கதிகலங்கி போயிருக்கிறார்.
ஆம்....தம்பியின் மனைவியான கவிதா என்வருடன் எட்வின்ராஜ் தகாத உறவில் இருந்ததை கண்கூடாக பார்த்து மேரி விக்கித்து நின்றதாக கூறப்படுகிறது.
இனியும் கணவனோடு வாழமுடியாது என தீர்மானித்து, பிள்ளைகளை அழைத்து கொண்டு தாய்வீட்டிற்கே திரும்பி இருக்கிறார்.ஆனால் பலரும் மேரியை கணவனோடு சேர்ந்து வாழ வற்புறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.அங்கு சென்றதும் இன்சூரன்ஸ் என்ற புதுப்பிரச்சனை உருவெடுத்திருக்கிறது.
இன்சூரன்ஸ் பணத்திற்காகவும், கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததாலும், குடும்பத்துடன் சேர்ந்து எட்வீன்ராஜ் தான் தாலிகயிறால் கழுத்தை இறுக்கி மேரியை கொலை செய்திருக்க வேண்டும் என அடித்து கூறுகின்றனர்.
மேரியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ஆதாரங்களுடன் காவல் கண்கானிப்பாளரை சந்தித்து மனு அளித்து சென்றிருக்கிறார்கள். போலீசாரின் முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.