வாய்க்காலில் இருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..சுவர் இடிந்து விழும் அபாயம்

x

வாய்க்காலில் இருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. சுவர் இடிந்து விழும் அபாயம்..அச்சத்தில் மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. கிளை வாய்க்கால் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாத காரணத்தால், தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்