"மதுபானம் விற்பனையில் விழுப்புரம் முதலிடம்" - அன்புமணி ராமதாஸ்
மதுபான விற்பனையில், விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தார். பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கல்வியில் கடைசி இடத்தில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற, அமைச்சர் பொன்முடி எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை என, கூறினார். ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அன்றைக்கு வேறு நிலைப்பாடு, இன்றைக்கு வேறு நிலைப்பாடு என செயல்படுவதாக விமர்சித்தார்.
Next Story