கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை... விஏஓ சங்கம் மீது புகார்... பகீர் கிளப்பும் ஆடியோ...
மணல் கடத்தலை தட்டி கேட்டதால் கொல்லப்பட்ட வி ஏ ஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் பகீர் ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆடியோ ஆதாரம் சொல்வதென்ன?
2021 ஜூலை மாதம், ஆதிச்சநல்லூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை தட்டி கேட்ட விஏஓ கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.
வெறும் கண்டன ஆர்பாட்டத்தோடு அந்த சம்பவம் அப்போதைக்கு அடங்கி போனது. ஆனால் அதன் தொடர்சியாக, முறைகேடுகளை எதிர்த்து போராடிய அந்த விஏஓ தற்போது கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.
கொல்லப்பட்டவர் லூர்து பிரான்சிஸ். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் உள்ள கோவில்பத்து பகுதியில் பணியாற்றி வந்திருக்கிறார்.
முரப்ப நாடுபகுதியில் மணல் கொள்ளையை நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்ததால், அவர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளின் கண்டங்கள், அரசின் நிவாரனங்கள் என தமிழ் நாட்டின் முக்கிய செய்தியாக பார்க்கபடும் இந்த கொலை வழக்கில் தற்போது ஒரு பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.
லூர்து பிரான்ஸிஸ்ஸின் உயிரை எடுத்தது வேண்டுமானால் மணல் கடத்தல் கும்பலாக இருக்கலாம், ஆனால் அதற்கு முழுகாரணமும் விஏஓ சங்கங்கள் தான் என ஒரு பகீர் ஆடியோ வெளியாகி உள்ளது.
லூர்து பிரான்சிஸ்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே ஆதிச்ச நல்லூரில் விஏஓ வாக பணியில் இருந்த போது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் அவரை தாக்கியிருக்கிறார்கள்.
அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடி தாலுகாவில் பணி இடம் காலியாகி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே உயிருக்கு
ஆபத்து இருப்பதாக கூறி வந்த லூர்து பிரான்சிஸ்சிற்கு அந்த இடத்தை கொடுக்காமல். விஏஓ சங்கத்தினர் தடுத்து விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால் லூர்து பிரான்சிஸ் கேட்ட இடம் கிடைக்காமல் மீண்டும், பிரச்சினைக்குறிய கோவில் பத்து கிராமத்திற்கு பணியில் சேர்திருக்கிறார். இது தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் என குமுறுகிறார் அந்த பெண் அதிகாரி..
நேர்மையாக இருந்த ஒரே காரணத்திற்காக லூர்து பிரான்சிஸ் எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற அதிர்சி அடங்குவதற்கு முன்னதாகவே, சொந்த துறை சார்ந்தவர்களின் அலட்சியமும் அதன் பின்னால் இருகிறது என்ற குற்றச்சாடு நம்மை திடுக்கிட வைக்கிறது.
(இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி விசாரனையில் இறங்கி இருக்கிறார்கள்.அப்போது தான் அதே பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியம், மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்தது உறுதியாகி இருக்கிறது. உடனே போலீசார் தனிப்படை அமைத்து ராமசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.இரண்டாவது குற்றவாளியான மாரிமுத்துவை திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.)
நேர்மையாக இருந்தால் இந்த நாட்டில் நமக்கு பின்னால் யாரும் நிற்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவி விடுமோ என்ற அச்சத்தை இந்த சம்பவம் எழுப்பி இருக்கிறது.