விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு... 2 திமுக நிர்வாகிகளை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு

x
  • கடந்த 2019-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் 2 பேர் பேசியதாக புகார் எழுந்தது.
  • இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில், திமுக நிர்வாகிகள் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
  • இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்