அடுத்த திரியை கொளுத்திய விஜய்.. வெடி வெடிக்கும் அரசியல் களம் - "ரொம்ப பயமா இருக்கு விஜய் அண்ணா" என புலம்புல்
விஜயின் அரசியல் பிரவேசம் பேசுபொருளாக உள்ள நேரத்தில் நா ரெடி பாடல் வரிகளும் அதற்கு பலம் சேர்த்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்..
நா ரெடிதான் வரவா..
அண்ணன் நான் இறங்கி வரவா..
எவன் தடுத்தும் என் ரூட் மாறாதப்பா...
என்ற வரிகளோடு விஜயின் லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடி பாடல் புரோமோ வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பாடலை விஜயே பாடியுள்ள நிலையில், அவர் உச்சரிக்கும் நான் ரெடிதான் வார்த்தையை அரசியலுடன் ஒப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இதற்கு பின்னணியில் இருப்பது விஜயின் கடந்த கால அரசியல்...
TIME TO LEAD சர்ச்சையில் பூதாகரமாக வெடித்த விஜயின் அரசியல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது.
2011ல் அதிமுக ஆட்சி அமைத்த போது அணிலாக உதவியதாக கூறியது... கத்தி, மெர்சல் படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள், சர்கார் விழா மேடையில் முதல்வரானால் என்ன செய்வேன் என கூறியது பலருக்கு பரீட்சயமானது..
உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட க்ரீன் சிக்னல் காட்டிய விஜய், வெற்றி பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்து அதையே அரசியல் குறியீடாக வெளியிட வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட வாரியாக ரசிகர்களை சென்னை அழைத்து கூட்டம் நடத்திய விஜய், அடுத்து அம்பேத்கர் பிறந்தநாளை மக்கள் இயக்கத்தினரை வைத்து கொண்டாட வைத்தார்.
காயிதே மில்லத் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.
அடுத்த மிகப்பெரிய நகர்வாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை அழைத்து கல்வி விருது விழாவை நடத்திய விஜய், அங்கும் சைலண்டாக அரசியல் கொடி ஏற்றினார்
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என அறிவுரை கூறிய விஜய், ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என பெற்றோரிடம் கூறுங்கள் என அட்வைசும் கொடுத்தார்
விஜய்யின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியலில் இருந்து வரவேற்றும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வந்தன. மீண்டும் விஜய் அரசியல் பேசுபொருளானது..
இந்த நேரத்தில்தான் நான் ரெடி என வந்து இறங்கியிருக்கிறார் விஜய்