"இனி நிம்மதியா பேசலாம்" சிறைவாசிகளுக்கு கிடைத்த புதிய வசதி. முழு திருப்தியடைந்த கைதிகள், உறவினர்கள்
வேலூர் மத்திய சிறையில், கைதிகள் பார்வையாளர்களுடன் உரையாடுவதற்காக இன்டர்காம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் 980 கைதிகள் உள்ளனர். கைதிகள் மற்றும் பார்வையாளர்கள் சந்திப்பின் போது, அதிகளவிலான கூச்சல் இருந்து வந்ததால் தெளிவாக உரையாட முடியவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து, பார்வையாளர்களுடன் கைதிகள் தெளிவாக உரையாடும் விதமாக இன்டர்காம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 10 இன்டர்காம் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலமாக தெளிவான உரையாடல் மேற்கொள்ள முடிந்ததாக தெரிவித்தனர்.
Next Story