லவ் டார்ச்சரால் உயிரை மாய்த்த இளைஞர்.. வேலூரில் நடந்த அதிரிச்சி சம்பவம் | vellore

x

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய இளைஞர், போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

எல்லப்பன்பட்டியை சேர்ந்த மணி என்பவர், ஒடுக்கத்தூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதுடன், மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வேப்பங்குப்பம் போலீசார் மணியை தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிகுப்பத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்ற மணி, போலீசார் விசாரணைக்கு அச்சப்பட்டு அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிகொண்டா போலீசார், சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்