விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ - வைரலான வீடியோ |வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

x

புதுச்சேரியில் உள்ள வில்லியனூரில் அடங்கல் சான்று வழங்க விவசாயியிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. தேத்தாம்பாக்கம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்துக்கு அடங்கல் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் அனந்தராமனிடம் விண்ணப்பித்துள்ளார். அவர், 4 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் பேரம்பேசி, 3 ஆயிரம் ரூபாயை விவசாயி கொடுத்ததாக தெரிகிறது. அனந்தராமன் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவருக்கு வில்லியனூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் மெமோ கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்