உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி வீடு புகுந்து பெற்றோர் வெறிச்செயல் - மனைவிக்கு நேர்ந்த கொடுமை.. கதறும் கணவன்
- தென்காசியில் காதல் திருமணம் செய்த வினித் - குருத்திகா பட்டேல் விவகாரம், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்தன. இந்த நிலையில், அதே பாணியில் மீண்டும் ஒரு சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
- கூடங்குளம் அருகே ஸ்ரீரெங்கநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான இளைஞர் முருகன். கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஒப்பந்த நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். முருகன், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுமிகா என்ற 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
- இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததாகவும், பின்னர் சுமிகாவை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது.
- இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், சென்னையில், கடந்த மாதம் 25ம் தேதி பதிவு திருமணம் செய்துள்ளனர்.
- கல்லூரிக்குப் போன மகள், நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால், சந்தேகமடைந்த தந்தை முருகேசன், தனது மகளை காணவில்லை எனக்கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
- இதுதொடர்பான விசாரணையில், சுமிகாவும் முருகனும் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவர, பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புதுமண தம்பதி, நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
- அப்போது, தனது பெற்றோரிடம் செல்ல சுமிகா மறுத்ததால், அவரது விருப்பப்படியே, முருகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது.
- அதனைத் தொடர்ந்து முருகனும் சுமிதாவும், கூடங்குளத்தில் வீடு எடுத்து, தனியாக இருந்து வந்துள்ளனர்.
- இந்த நிலையில், முருகன் தனது மனைவி சுமிதாவை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக் கண்ட பெண்ணின் வீட்டார், வீடு புகுந்து, முருகனையும், அவரது உறவினர்களையும் தாக்கிவிட்டு, சுமிதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
- இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்நிலையம் சென்ற முருகன், தனது மனைவி சுமிகாவை கடத்திச் சென்றதாக, அவரது தந்தை முருகேசன் உட்பட 10 பேர் மீது புகார் தெரிவித்தார்.
- இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து 10 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தென்காசி வினித் - குருத்திகா பட்டேல் பாணியில் அரங்கேறிய இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story